திங்கள், 1 ஜூன், 2009

இயற்கையும் மனிதனும்




ஆதிமனிதன் இயற்கையோடு இயற்கையாய் இணைந்து வாழ்ந்தான், அவனுக்கு வீடில்லை, வாசலில்லை, பணமில்லை அதனால் வாழ்வில் பயமுமில்லை! இயற்கையின் சோதனைகளை நேருக்கு நேர் எதிர்கொன்டான், அந்த இயற்கையை பஞ்சபூதங்களென பகுத்து வைத்து தனது ஐம்புலன்க‌ளின் துணைகொண்டு அவற்றோடு இணைந்து வாழ்ந்து வாழ்வை வெற்றிகொள்ள கற்றுக்கொண்டான்!

நாளாவட்டத்தில், அவன் தன் வாழ்வில் துணை நின்ற இயற்கையை தெய்வமாய் வழிபடத்துவங்கினான், ஆகாய வெளியை ஆகாச வாணியென்றும் , புவியை பூமாதேவியென்றும், நீரை கங்காதேவி என்றும் நெருப்பை அக்கினிபகவான் மற்றும் காற்றை வாயுபகவான் என்றும் வகைப்படுத்தி, பஞ்ச பூதங்களை அவன் வழிபடத்துவங்கினான்! இந்தக் குறியீடுகள் இனத்துக்கு இனம் மாறுபடுகின்றன‌ (அடியேன் தமிழோடு இருப்பதால் என் சிற்றறிவுக்கு எட்டிய தமிழ் வார்த்தைகளால் இங்கே வகைப்படுத்தியிருக்கிறேன்)


கால ஓட்டத்தில் அவன் மேன்மையடைவதாய் எண்ணிக்கொண்டு பல மதங்களைப்படைத்து இயற்கையை புறக்கணித்தான், விளைவு, ஆதிமனிதன் வாழ்க்கைகூட நம்மளவு இழிவுற்றதாய் அமைந்திருக்காது என்றே இன்றைய வாழ்க்கையை எண்ணத்தோன்றுகிறது!
போர், பேரிடர், வறுமை, வறட்சி என பூமியே அழிவை நோக்கி சென்று கொன்டிருக்கிறது, இந்த லட்சணத்தில் பூமியை நாறடித்தது போதாது என்று பிரபஞ்சத்தின் வேறு கிரகங்களிலும் ஆராய்ச்சி நடக்கிறதாம் குடியேறுவதற்கு!?
அதுவும் வெற்றி பெற்றால் சொல்லவே வேண்டாம், மனிதர்கள் என்ன லேசுபட்டவர்களா? ஓசோனிலேயே ஓட்டை போட்டவர்களாயிற்றே நாம்! இப்பொழுது நாடுகளுக்குள் நடக்கும் போராட்டங்களை நாளை இன்ன பிற கிரகங்களிலும் நிதம் எதிர்பார்க்களாம்.

சரி ந‌ம் விடயத்திற்கு வருவோம், இத்தகைய மேன்மைமிகு இயற்கையுடன் இணந்து வாழ நமது முன்னோர்கள் பண்டைய விஞ்ஞானங்களில் ஒன்றான வாஸ்து சாஸ்திரத்தில் பல குறிப்புகளை விட்டுச்சென்றுள்ளனர். மிகவும் எளிமையான சில விதிமுறைகளை கடைபிடிப்பதன் வழி அமைதியான, நன்மைகள் சூழ்ந்த நல் வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள இயலும், அவற்றில் சில துளிகள் உங்கள் பார்வைக்காகவும், பிரயோகத்திற்காகவும் :‍

பஞ்சபூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும் உள்ள‌ உறவுகள் சீர்ப‌ட‌ ப‌ரிந்துரைக்க‌ப்ப‌டும் ச‌ம‌நிலைப்ப‌யிற்சிக‌ள்,

ஆகாயம் - செவிமடுத்தல்

மென்மையான இசையை செவிம‌டுப்ப‌து,

அதிக‌மான‌ ஒலியை த‌விர்ப்ப‌து,


காற்று - நுகர்தல்

வாசனை ஊதுப‌த்திக‌ளின் உப‌யோக‌ம்

வாசனைத்திரவியங்களின் உபயோகம்

நெருப்பு - பார்வை

எரியும் மெழுகுவ‌ர்த்தி ஒளியை உற்று நோக்குதல்

அதிகாலை சூரிய‌ வெளிச்ச‌த்தை காணுதல்

சூரிய‌ ஒளியை வீட்டிற்குள் ஊடுருவச்செய்தல்

நீர் - ‍சுவை

ஒரு பாத்திரத்தில் நீர் வார்த்து அதில் ம‌ல‌ர்க‌ளை மித‌க்க‌ விடுதல்

பூமி - தொடுதல்

பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்து கொன்டு கால‌ணி இன்றி புல் த‌ரையில் கால் பதியுங்கள்

இனிய நண்பர்களே நாம் என்றும் இயற்கையை மதித்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நன்மையடைவோம்.

ஆதாரம் : வாஸ்து சாஸ்த்திர வழிகாட்டி ( T.செல்வா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக