சனி, 30 மே, 2009

குழந்தைச்செல்வம்


செல்வங்களில் சிறந்த செல்வம் குழந்தைச்செல்வம். மணமான தம்பதியரை புலன் விசாரணை செய்யும் சில பெரிசுகள், ஏதாவது புழு பூச்சி உண்டா என வினவுவார்கள், இவர்கள் ஏன் நேரடியாக குழந்தை உண்டா என கேட்காமல் இப்படி சுற்றி வளைக்கிறார்கள் என்றால் அதற்கு வேறு அர்த்தங்கள் உண்டாம்.

அதாவது பூச்சி என்றால் பெண் குழந்தையாம்! கொஞ்ச நாள் பிறந்த வீட்டில் ஆட்டம் போட்டுவிட்டு திருமணமானதும் புகுந்த வீட்டுக்கு பறந்து விடுவாளாம்.

புழு என்றால் ஆண் குழந்தையாம்! க‌டைசிவ‌ரை அப்பா அம்மாவை குடைந்து கொன்டே இருப்பானாம்!


இதுதான் இப்ப‌டி என்றால், திரும‌ண‌மாகிப்ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ த‌ம்ப‌திய‌ரிட‌ம் இந்த‌ பெரிசுக‌ளின் விச‌ரிப்பு வேறு மாதிரியாக‌ இருக்கும், குழ‌ந்தை குட்டிக‌ள் எத்தனை? என்று வின‌வுவ‌ர்.

எத்தனை குழ‌ந்தைக‌ள் என்று நேர‌டியாக‌ வின‌வாம‌ல் ஏன் இப்ப‌டி பூட‌க‌மாக‌ கேட்கிறார்க‌ள் என்றால் "ஒன்றோ இர‌ண்டோ இருந்தால் குழந்தையாம், அதற்கு மேல் போய்விட்டால் குட்டிகளாம்"!


என்ன‌ ர‌வுசு இந்த பெரிசுகளுக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக